இந்தியா

தமிழகம்: போடி அருகே மலையாளிகளின் வீட்டுக்கு தீ

தமிழகம்: போடிநாயக்கனூர் மலையாள மக்களுக்கு சொந்தமான தோட்டம், வீடுகள் உள்ளிட்டவை தீ வைத்து கொளுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைக்கப்போவதாக வெளியான தகவலையடுத்து, போடிநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் கேரள மக்களுக்கு சொந்தமான தோட்டம், வீடு, பண்ணை வீடு உள்ளிட்டவற்றை தீவைத்து கொளுத்தினர். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன், டிஎஸ்பி பி.சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதேபோன்று போடியில் இருந்து கேரளா செல்லும் பாதையில் அமைந்துள்ள மத்திய அரசின் நறுமன வாரிய அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றகையிட்டனர். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்று கூறி, மத்திய ஏலக்காய் நிறுவன அலுவலகம் மீது அப்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.