சிறிலங்கா

சிறிலங்காவில் உயர்மட்ட சீன இராணுவக்குழு.

சீன இராணுவத்தின் பிரதித் தலைவர் ஜெனரல் மாஹிக்ஸியோஷன் தலைமையிலான சீன மக்கள் விடுதலை இராணுவத்தினரின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்கா சென்றுள்ளது. தொழில்முறைப் பயிற்சிகள், போர்ப்பயிற்சி மற்றும் சிறிலங்காகான மேலதிக இராணுவ உதவிகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த உயர்மட்டக்குழு சிறிலங்கா சென்றுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவை இன்று சந்தித்துப் பேசவுள்ள இந்த உயர்மட்டக் குழுவினர், இருநாட்டு இராணுவத்தினர்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்திக்கொள்ளுவது மற்றும் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

சீன இராணுவப் பயிற்சி நிலையங்களில் அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதை அதிகரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.