சிறிலங்கா

"ஐ. நா. நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை"– சிறிலங்கா அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையானது, சாட்சியங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படாது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, இந்த அறிக்கையை அங்கீகரிக்க முடியாது எனவும் சிறிலங்கா அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தேசியத் தன்மைக்கும், அபிமானத்திற்கும் எவரும் களங்கம் ஏற்படுத்த முடியாது.

சிறிலங்காவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் அனுமதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.