தமிழீழம்

திருக்கோணேச்சரத்தில் 33அடி சிவனின் சிலை.

திருகோணமலையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக்களின் புனிதத்தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 33 அடி உயர சிவன் சிலை இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகில் புதியதொரு தியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெரிய லிங்கமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா நிகழ்வில் பெரியார்களான காந்தி ஐயா, கணபதிப்பிள்ளை உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.