தமிழீழம்

சிங்களவரோடு சேர்ந்து கிரிகெட் விளையாடிய சுமந்திரன் MPக்கு புரட்சிகர மாணவர் அமைப்பு கண்டனம்

தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

தமிழ்த் தேசிய கூடமைப்பின் தேசிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் MP அவர்கள் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டினை செய்து வருகின்றாரோ என எண்ணத்தோன்றுகிறது.

ஏற்கனவே இலண்டனில் நடந்த கூட்டத்தில் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து புலம்பெயர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர், இப்போது பேரினவாதியோடு மட்டையாட்டம் ஆடி தமிழர்களின் இரத்தத்தை பேரினவாதி மகிந்தவுடன் பகிர்ந்துள்ளார்.

உலகம் முளுவதும் உள்ள இளையோர்கள் சிங்கள அணியின் மட்டையாட்டத்தைப் புறக்கணிக்க இவர் அவர்களுடன் கிரிகெட் ஆடியது உலகத் தமிழர்களை பெரும் அவமானத்திற்குள் தள்ளியுள்ளது. திரு.சுமந்திரன் பெறுப்போடு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

த.தே.கூட்டமைப்பு பெறுப்பற்றவர்களையும், சிங்களத்திடம் கொஞ்சி விளையாடுபவர்களையும் ஒதுக்கி வைக்க வேண்டு என்பதோடு திரு.சுமந்திரன் அவர்களுக்கு எமது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம் என அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.