சில்வா அறிக்கை சிறிலங்கா பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.

Home » homepage » சில்வா அறிக்கை சிறிலங்கா பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (சில்வா ஆணைக்குழு) அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த சில்வா அறிக்கையை முன்வைத்துள்ளார்.

மொழிபெயர்ப்பு பணிகள் தாமதமாகும் காரணத்தினால் சில்வா அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இன்று திடீரென சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான விடயங்களும், பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments Closed

%d bloggers like this: