சிறிலங்கா

"ஐ.நா. நிபுணர்குழு பரிந்துரைக்கு அமைய சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை" -மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவது தொடர்பிலோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்தோ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழு எந்தவித வழிகாட்டுதல்களையும் முன்வைக்க தவறியுள்ளது.

இதனால், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்த அறிக்கையின் பரிந்துரைக்கு அமைவாக சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் தேவை உணரப்பட்டுள்ளது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.