சிறிலங்கா

"விஜயகலா அக்காவுக்கு எப்பவும் என்ர கோட்டிலதான் கண்". – கருணா

கருணாவுக்கு கோட் சூட் போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். சனம் படும் கஷ்டம் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டினார். விஜயகலா அக்காவுக்கு என்ர கோட் சூட்டில தான் எப்பவும் ஒரு கண் என இதற்கு பதிலளித்த கருணா நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் செய்வதற்கு இன்னும் 6647பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். ஏனையவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா தெரிவித்த போது சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குறுக்கிட்டு இவருக்கு நாளுக்கொரு கோட்டை போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். வன்னியில சனம் படும் கஷ்டம் இவருக்கு தெரியாது. பெயரளவிலதான் அங்க மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களே ஒழிய அவர்கள் அவல வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள் என விஜயகலா தெரிவித்தார்.

அப்போது பேசிய கருணா விஜயகலா அக்காவுக்கு எப்பவும் என்ர கோட்டிலதான் கண். நான் கோட் சூட் போட்டு நாடாளுமன்றம் வரவில்லை என்றால் விஜயகலா அக்காவும் நாடாளுமன்றம் வந்திருக்க முடியாது என தெரிவித்தார்.
நான் மட்டும் ஆயுதம் தூக்கவில்லை. இங்க இருக்கிற செல்வம் அண்ணையும் ஆயுதம் தூக்கினவர்தான் என கருணா தெரிவித்தார்.