சிறிலங்கா

சில்வா குழுவின் அறிக்கையை வரவேற்ற பான் கீ மூன்!

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தியுள்ளதை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை நோக்கிய முக்கியமான அடியெடுத்து வைப்பதற்கும் அவசியமான பொறுப்புக் கூறுதல் பற்றிய கவலைகளுக்கு பதிலளிப்பதற்கான தனது கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முன்னோக்கி நகர்த்தும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நம்புகிறார்“ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.