அனைத்துலகம்

பிலிப்பைன்ஸ் புயலினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 436 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் இன்றுதாக்கிய புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 436 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை மேலும் 162 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளம் தாக்கியபோது உறக்கத்திலிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸில் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.