மக்கள் போராட்ட இயக்கத்தின் வாகனம் யாழில் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்

Home » homepage » மக்கள் போராட்ட இயக்கத்தின் வாகனம் யாழில் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகளின் வாகனம் இனம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித்குமார தெரிவித்துள்ளார்

தாங்கள் யாழ். பஸ் நிலையத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தமது போராட்டம் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களுக்கு விளக்கி கூறச்சென்று வேளையிலேயே யாழ். கஸ்தூரியார் வீதியில் வைத்து தமது வாகனம் தாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இத் தாக்குதலின் காரணமாக வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments Closed

%d bloggers like this: