புலம்பெயர்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம்!

யேர்மன் தலைநகரத்தில் இன்று 16 .12 .2011 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது .

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுகள் என்றும் எங்களுடன் தவழ்ந்து கொண்டிருக்கும் முகமாக காலநிலை மோசமான தினத்தில் கூட மக்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர் .

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணங்கப்பட்டதுடன் மண்ணுக்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் , நாட்டுப்பற்றாளர்களுக்கும் மக்களுக்காகவும் சிறப்பாக இம் மாதத்தில் 2004 ஆண்டில் ஆழிப்பேரலையில் தமது உயிர்களை பறிகொடுத்த உறவுகளுக்காகவும் மற்றும் 15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது .

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2005 ஆண்டு மாவீரர் நாளில் ஆற்றிய உரையின் பகுதியும் காணொளி ஊடாக திரையில் காண்பிக்கப்பட்டது .

தொடர்ந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த அனுபவப்பகிர்வும் கவிதையும் இடம்பெற்றது.

இறுதியாக யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை 2011 ஆம் ஆண்டு முன்னெடுத்த அரசியல் பணிகளையும் தாயக மக்களுக்காக ஆற்றிய சேவையின் தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .