புலம்பெயர்

கனடாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள தமிழர்!

கனேடிய அரசாங்கத்தால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த தமிழர் கனடாவில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ரொரன்டோ – ஒன்றாரியா பகுதியில் வசித்து வந்த தமிழரான  செல்லத்தம்பி தர்மபாஸ்கரன் என்பவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்  என முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

61 வயதான இவரை கனடாவில் இருந்து நாடு  கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுசெல்லத்தம்பி  பாஸ்கரன் மிக மோசமான தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளவர் என  கனேடிய குடிவரவு எல்லை முகவர் நிலைய தலைவர் லக் போர்டெலன்ஸ்  அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்  குற்றச்செயல்களில் செல்லத்தம்பி ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அவர் விரைவில்  நாடு கடத்தப்படுவார் என அவர் அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில்  அகதி அந்தஸ்த்து கோரி நுழைந்த செல்லத்தம்பிஇ அகதி அந்தஸ்த்து  மறுக்கப்பட்டு நாடு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைவாக  இருந்து வந்துள்ளார். கடனாவில் தேடப்பட்டு வரும் 90 முக்கிய  குற்றவாளிகளில் 15வது நபராக செல்லத்தம்பி பாஸ்கரன் கைது  செய்யப்பட்டுள்ளார்.