இந்தியா

நடிகர் மன்சூர் அலிகான் கைது.

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் காணி அபகரிப்பு குற்றச்சாட்டின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வி.துரைவேல் என்பவர் செய்த முறைப்பாட்டின் காரணமாக மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அருகம்பாக்கத்தில் தனக்குச் சொந்தமான 1247 சதுரஅடி பரப்பளவுள்ள காணியில் மன்சூர் அலிகான் 16 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை சட்டவிரோதமாக நிர்மாணித்ததாக துரைவேலு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் ஆரம்பத்தில் தனது ஆட்சேபத்தை தெரிவித்தபோது; அவரை மன்சூர் அலிகான் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார்.