அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்யவுள்ளனர்.

Home » homepage » அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்யவுள்ளனர்.

அமெரிக்காவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுபாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் தந்திரோபாய கற்கை நிலையத்தின் அண்மைய கிழக்கு தெற்காசிய நிலையத்தைச் சேர்ந்த தூதுவர் ஜேம்ஸ் ஏ லரோக்கோ ஜனவரி 15 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வர்த்தக திணைக்களத்தின் ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் ஹொலி வினியார்ட் ஜனவரி 17 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் ஜனவரி 18 முதல் 24 ஆம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைககள், தொழிலாளர் பிரிவுக்கான பிரதி உதவிச் செயலாளர் தோமஸ் ஓ மேலியா ஜனவரி 20 முதல் 26 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Comments Closed

%d bloggers like this: