சிறிலங்கா

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதில் சிறிலங்கா அரசு தவறிவிட்டது.

சிறிலங்கா மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பலர் கருதுவதாக அவுஸ்திரேலிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாரியா வம்வாகினோ தெரிவித்துள்ளார்.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து சகல தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் புனரமைப்பு பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.