ஜோதிட கணிப்பு வெளியிட்ட டிவி நிகழ்ச்சிக்கு ராஜபக்சே தடை.

Home » homepage » ஜோதிட கணிப்பு வெளியிட்ட டிவி நிகழ்ச்சிக்கு ராஜபக்சே தடை.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் இலங்கை அதிபர் ராஜபட்ச கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் விஜய் டிவியில், டிசம்பர் 31-ம் தேதியன்று 2012-ல் இந்திய அரசியல்வாதிகளின் நிலைகுறித்து ஜோதிட கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 6 பிரபல ஜோதிடர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அண்டை நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் நிலை குறித்தும் கருத்து கேட்டார்.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் ஜாதகத்தைக் கொண்டு கருத்து தெரிவித்த ஜோதிடர் குழுவின் தலைவர், 2012 முடிவதற்குள் அவர் அதிபர் பதவியைவிட்டு விலகுவார் என்று தெரிவித்தார். இதர ஜோதிடர்களும் அதை ஆமோதித்தனர்.

இலங்கையில் விஜய் டிவியை டயலாக் கேபிள் டிவி ஒளிபரப்புகிறது.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான தகவல் அறிந்ததும் கோபமடைந்த ராஜபட்ச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநரை கண்டித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்பினால் அதை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments Closed

%d bloggers like this: