தமிழீழம்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களுக்கான நினைவஞ்சலி

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களது 38வது ஆண்டு நினைவு நாள்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களது 38வது ஆண்டு நினைவு நாள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது

கடந்த 1974ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது சிறிலங்கா பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 10 பேரையும் நினைவு கூரும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இந்த அஞ்சலி நிகழ்வில் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும், சுடர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு நினைவு உரைகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன் முன்னாள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான சொலமன் சிறில், சிவாஜிலிங்கம் தர்மலிங்கம் சித்ததாத்தன் மற்றும் யாழ்.மாநாகர, பிதேச சபையின் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட  சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  கருத்து கூறுகையில் “இந்த படுகொலையானது இன அழிப்பின் தொடக்கமாகவே அமைந்தது. தமிழர்கள் இந்த நாட்டில் அன்றிலிருந்து இன்றுவரை அழிக்கப்பட்டுகின்றனர் என்றும் தமிழினம் அழிந்து போன இனமும் அல்ல தோற்றுப்போன சமூகமும் அல்ல நாங்கள் விழவிழ எழுந்து இலட்சியத்தை நோக்கி செல்பவர்கள்” என்றும் அவர் தெரிவித்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்லைன்