தமிழீழம்

இலங்கைத் தீவின் 4,300 வடக்குப் பிரதேச சிறுவர்கள் சிறார் இல்லங்களில்.

வன்னியில் நடந்த மிகக் கொடூர மான போரைத் தொடர்ந்து வடக் குப் பிரதேசம் ஆதரவற்ற சிறுவர் களால் நிரம்பி வழிகின்றது. இலங்கைத் தீவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் 4,300 சிறுவர்கள் பராமரிப்பு இல்லங்க ளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வசதி குறைந்த பெற்றோரால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள் இவர்களுள் அடங்கவில்லை.

இலங்கைத் தீவிலேயே அதிகூடிய சிறுவர் இல்லங்கள் இயங்கும் பிரதேசமாகவும் வடபகுதியே உள்ளது. 91 சிறுவர் இல் லங்கள் இங்கு இயங்குகின்றன. முறைப்படியான அனுமதி பெற்றுப் பதிவு செய்யப்படாத 44 இல்லங்களும் அவற்றி னுள் அடக்கம்.
சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் 729 பேர் தாய், தந்தை இரு வரையும் இழந்துள்ளனர். மீதி 3,600 பேரும் தாய் அல்லது தந்தையில் ஒருவரை இழந்துள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக 9,678 சிறுவர்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 1,366 பேர் தாய், தந்தை இருவரையும் இழந்தவர்களாவர். மீதி 8,312 பேர் தாய் அல்லது தந்தையில் ஒருவரை இழந்துள்ளனர்.