தமிழீழம்

திருமலைக் கிராமம் ஒன்றில் சிங்கள் காடையர்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்! பல தமிழர்கள் படுகாயம்!

திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களி கிராமத்தில் சிங்களக் காடையர்கள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெருமளவான தமிழர்கள் காயம் அடைந்திருக்கின்றனர். இன்று இரவு 7 மணியளவில் குறித்த கிராமத்தினுள் புகுந்த சிங்கள் காடையர் குழு தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பவத்தினால் அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டதாக அங்கிருந்து வெளியாகியிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் முதற்கட்டமாக நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைகக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டோர் தொகை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என்றும் இது குறித்த மேலதிக தகவல்களை நாளையே முழுமையாகத் திரட்ட க்கூடியதாகவுள்ளது..