சிறிலங்கா முக்கிய செய்திகள்

தன்னைப் பாதுகாப்பு ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு என்கிறார் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா!

தான் இதுவரை ராஜபக்ச குடும்பத்திற்கே உழைத்ததாகவும், எனவே தன்னை பாதுகாத்துக் கொள்வது ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு எனவும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நாட்களில் விரதமிருந்து கதிர்காமத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு அவருக்கு நெருக்கமான சிலரிடமே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது தன்னைப் பாதுகாப்பதற்காக சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச நேரடி தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், களனி பிரதேச சபைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா சனாதிபதி மிக விரைவில் சிறந்த பாடமொன்றைக் கற்பிப்பார் எனவும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.