தமிழீழம்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மக்களை ஆட்பதிவு நடவடிக்கயில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதவது கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் கிருஸ்ணபுரம் அக்கராயன் ஆகிய பிரதேசங்களிலே சிறிலங்கா படையினர் இவ்வாறான மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பமாக புகைப்படம் எடுப்பதற்கு கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் சிறிலங்கா இராணுவ முகாமிற்குச் செல்லவேண்டும் அங்கு வைத்து பதிவுகள் மேற்கொள்ளப்படும் இதன் பின்னர் குடும்பத்திற்கு சிறிலங்கா இராணுவத்தினரின் குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதாகவும் இவ் பதிவு நடவடிக்கையானது மிகவும் இரகசியமான முறையிலே இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.