இந்தியா

கச்சதீவை விரைவில் கைப்பற்றியே தீருவேன் – ஜெயலலிதா சபதம்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக கூறியுள்ளார்.

கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும் அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும் கச்சதீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை திமுக பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் படி கச்சதீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது 21.8.1974 அன்று தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி, ��இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண்டதுமான கச்சதீவு பிரச்சனையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சதீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில், இலங்கை அரசோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.��

என்னும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியும், 1974 ஜூன் மாதம் 29 ஆம் திகதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியபோது, தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி ��கச்சதீவின் மீது இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறது.

நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர்மானத்தைக் கருத்திலே எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.�� என்று கடிதம் அனுப்பியும், திமுக ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும் இருக்கிறோம்.

மேலும், 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில், கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; மத்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங், 1974-ல் கருணாநிதியை சென்னையில் சந்தித்த போதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் கருணாநிதி நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால் கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திமுக, இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.