அனைத்துலகம் முக்கிய செய்திகள்

ஆர்ப்பாட்டங்களையடுத்து பதவி விலகினார் மாலைதீவு ஜனாதிபதி! இராணுவத் தலைமையகத்தில் தஞ்சம்!!

மாலைதீவு அரசாங்க வானொலியை அந்த நாட்டின் பொலிஸ்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புச் சேவைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதியால் சில வாரங்களுக்கு முன்னர் அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததனையடுத்து மாலைதீவில் அமைதியின்மை ஏற்பட்டது தெரிந்ததே.

பிந்திய தகவல்களின்படி மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தனது பதவியிலிருந்து திடீர் இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளுடன் இணைந்து சில பொலிஸாரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாலைத்தீவு ஜனாதிபதி இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பதவி விலகி அந்த இடத்திற்கு தற்போதை துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் என்பவரை நியமிக்க மாலைதீவு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மாலைத்தீவு இராணுவ பிரிகேடியர் அஹமட் சியாம் தெரிவித்துள்ளார்.