சிறப்புச்செய்தி புலம்பெயர் முக்கிய செய்திகள்

தமிழீழத்தின் அடையாளங்களையும் அரங்கேற்றிய கனடாவின் யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள்!!

கனடாவின் யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் நடாத்திவரும் பல்கலாச்சார வார நிகழ்வுகளின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டு தமது நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில், யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பும் கலந்துகொண்டு தமிழீழத்தின் அடையாளங்களையும் தமிழ் மக்களின் கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவற்றை முன்னிறுத்தியும் நிகழ்வுகளை முன்னெடுத்தது.

தமிழீழ தேசிய கொடியினை முன் நிறுத்தி தமிழ் மாணவர்கள் தமது நிகழ்வை முன்னெடுத்தனர் மற்றும் அனைத்து நாட்டு கொடிகளுடன் தமிழீழ தேசிய கொடியும் பறக்க விடப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுகளில் எமது தேசிய அடையாளங்களை முன்னிறுத்தியது எமது அடையாளங்களை வெளிகொணர்வதோடு மட்டுமல்லாமல் புலம்பெயர் மண்ணில் தமிழீழத்துக்கான ஒரு ஆதரவு தளத்தை உருவாக்கும் முயற்சியாகவும் அமைந்தது. மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வின் வேறுபல கலாச்சார அம்சங்களும் இடம்பெற்றன.