தமிழ் அமைப்புக்களின் சர்வாதிகரசனநாயகம்.

Home » homepage » தமிழ் அமைப்புக்களின் சர்வாதிகரசனநாயகம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்காலுடன் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேற்பதற்காக பல்வேறு சனநாயக அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. கேபி எனப்படும் குமரன் பத்மநாதனால் முன்மொழியப்பட்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் உலகத்தமிழர் பேரவை மற்றும் நாடுகள் ரீதியான அனைத்து பேரவைகள் மற்றும் மக்கள் அவைகளும் தாம் சனநாய அமைப்புகள் எனவே கூறிக்கொள்கின்றன.

ஆனால் இதில் எந்தவொரு அமைப்பும் சனநாயக விழிமியங்களை பின்பற்றி செயல்படவில்லை என்பதை இந்த அனைத்து அமைப்புக்களின் செயல்பாடுகளும் வெளிப்படுத்தகின்றன.

சனநாயக விரோத இடது சாரி அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்ட புரட்சியால் விடுதலையான நாடுகளில் தொடர்சியான சர்வாதிகார ஆட்சியே நிலவுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவே இப்பொழுது பல நாடுகளில் புதிய புரட்சிகள் நடைபெற்றுவருகின்றது. தமிழீழ விடுதலையையும் சனநாயக வழியில் போராடுவதாக கூறிக்கொள்ளும் இந்த அமைப்புக்கள் மறைமுக சர்வாதிகார போக்கை பின்பற்றுமேயானால் விடுதலை பெற்ற தமிழீழத்திலும் இதே கொந்தளிப்பு தோன்றுவது தவிர்க்கமுடியாது.

புலம் பெயர் தேசத்தில் இயங்கும் முக்கிய தமிழ் அமைப்புக்களின் சனநாயக விரோத செயல்பாடுகளில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றோம். இந்த அமைப்புக்கள் பெரும்பாலும் ஒரு தனிப்பட ஒரு சிலரையோ அல்லது ஒரு சிலரின் குடும்பத்தை முன்னிலைப்படுத்தியே செயல்படுகின்றன.

கேபி யால் ஆரம்பிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் பொறுப்பை கேபியால் நியமிக்கப்பட்ட உருத்திரகுமாரே தொடர்ந்து கொண்டுள்ளார். நாடுகடந்த அரசின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட விரும்புபவர் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும் அல்லது விரும்பத்தக்கது என கேபியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான குழுவினர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்காவை விட்டு எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியாத உருத்திரகுமாரன் அந்த அமைப்பின் பிரதமராக இவரின் ஆதரவாளர்களால் தெரிவுசெய்ப்பட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழஅரசில் அங்கம்வகிக்க விரும்புவதாக தெரிவித்து தேர்தலில் நின்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பகுதியினர் உருத்திரகுமாரனின் ஆதரவாளர்களுடன் ஏற்ப்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசிற்கென உருத்திரகுமாரன் குழுவினரால் தயாரிக்கப்பட்ட யாப்பை ஏற்காது வெளியேறி தாம் தான் உண்மையான சனநாயகவாதிகள் என கூறி உருத்திரகுமாரன் குழுவினருக்கு எதிராக சனநாயக அணி என ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் சனநாயக அணியில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் பட்டியலை இவர்களது இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த சனநாயகவாதிகளால் வெளியிடப்பட்ட பட்டியலில் இருக்கும் சிலர் தமது பெயர் இந்த பட்டியலில் இருபதே தெரியாது என தெரிவித்துள்ளனர். டென்மார்க்கை சேர்ந்த மூவர் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பட்டியலில் உள்ள டென்மார்க்கை சேர்ந்த ஒருவரை இது தொடர்பாக வினாவிய போது இந்த பட்டியலில் தமது பெயர் இருப்பது சமீபத்தில் தான் தமக்கு தெரிந்ததாகவும் தமது பெயரை உடனடியாக இந்த பட்டியலில் இருந்து நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசின் சனநாயக வாதிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இவரின் இந்த வேண்டுகோளை சனநாயகவாதிகள் இன்னும் நிறைவேற்றியதாக தெரியவில்லை.

உலகத்தமிழர் பேரவை என்ற பெயரில் இயங்கும் அமைப்பு உலகத்தமிழரை பிரதிநிதிப்படுத்துவதாக தெரியவில்லை. குறிப்பாக ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளில் வாழும் ஒரு சிலரை மட்டும் கொண்டே இந்த அமைப்பு இயங்குகின்றது. அனைத்துலகத்தில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துமக்களையும் இந்த அமைப்பு பிரதிநிதிப்படுத்தவில்லை.

தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் தோறும் உருவாக்கப்பட்ட அமைப்புக்களின் செயல்பாடுகளிலும் சனநாயக விரோதம் அல்லது ஒரு சிலரின் எண்ணங்களை மட்டும் செயல்படுத்துவதாகவே தெரிகின்றது. இந்த அமைப்புகள் தாம் உருவாக்கிய யாப்பில் உள்ள சரத்துக்களை பின்பற்றுவதாக தெரியவில்லை.

கடந்த வருடம் அனைத்துலக மக்கள் அவை என்ற அமைப்பு சிலரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது தொடர்பாக நாடுகள் தோறும் இயங்கும் அமைப்புகளுக்கு தெரிவிக்கப்படாமலே பிரான்சு நாட்டில் இருக்கும் சிலரால் இந்த அமைப்பு அமைக்கப்பட்டதாகவும் இதற்கு பிரான்சை சேர்ந்த பிரதீப் என்பவர் இணைப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

பிரான்சு தமிழிழீ மக்கள் பேரவை என்ற அமைப்பு ஒரு சனநாயக அமைப்பாக கூறிக்கொண்டாலும் அண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பிரான்சு கிளையான தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தமது உபஅமைப்பென கூறியிருந்தது.

பதிவு இணையத்தளத்தில் வந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அறிக்கையை முழுமையாக பார்க்கை இங்கே அழுத்தவும்
பதிவு இணையத்தளத்தில் வந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அறிக்கையை முழுமையாக பார்க்கை இங்கே அழுத்தவும்

டென்மார்க்கில் இயங்கும் தமிழர் பேரவை ஒரு சனநாயக அமைப்பாக டென்மார்க்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களின் ஆதரவுடன் 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆம் ஆண்டு டென்மார்க் தமிழர் பேரவையின் தலைவரால் தன்னிச்சையாக தனது சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தி தனது நண்பர்களை இணைத்து புதிய உப செயற்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் பேரவையின் யாப்பின் சரத்துக்களுக்கு முரனாக பலர் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். பேரவையின் நிர்வாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமல் முடிவுகள் எடுக்கபட்டுள்ளது. தமிழீழ விடுதலைக்கு எதிராக செயற்பட்டவர்களை பேரவையின் செயற்குழுவில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments Closed

%d bloggers like this: