புலம்பெயர் முக்கிய செய்திகள்

பெப்ரவரி 27முதல் மார்ச் 5ம் நாள் வரை தமிழர்கள் அனைவரும் ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம்.. செந்தமிழன் சீமான் அழைப்பு..

பெப்ரவரி 27ஆம் நாள் தொடங்கவிருக்கின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களை ஐ.நா முன்றிலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் இருந்து செந்தமிழன் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஜெனீவாவை நோக்கிய நடை பயணங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சீமான் அவர்கள், பெப்ரவரி 27ஆம் நாள் முதல்  மார்ச் 5ம் நாள் வரை நடை ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில்  சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி, இடம்பெறவிருக்கின்ற போராட்டங்களில்  எமது உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

எமக்கான சுவசாத்தை நாமே சுவாசிப்பது போல், எமது விடுதலையை நாமே போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஓடாத மானும் போராடாத இனமும் வென்றெடுத்ததாக சரித்திரம் இல்லை எனும் புதுவை இரத்தினதுரையின் வரிகளுக்கமைய அனைவரும் எழுந்து ஆர்ப்பரித்து ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.