செல்லக்கிளி அம்மானின் சகோதரர் ஜநா வில் சாட்சி!

Home » homepage » செல்லக்கிளி அம்மானின் சகோதரர் ஜநா வில் சாட்சி!

ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா தூதுக்குழுவின் மற்றுமொரு பிரதிநிதிகள் குழு இன்று ஜெனீவா பயணமாகியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சிறிலங்காக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களடங்கிய தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் இக்குழுவும் பங்களிப்பை வழங்கும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் சிறிலங்கா சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு மாவட்ட சிறிலங்கா ஜனாதிபதியின் இணைப்பாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவீரர் செல்லக்கிளி அம்மானின் சகோதருமான எஸ்.கனகரத்தினம் ஆகியோரடங்கிய குழுவினரே இன்று அதிகாலை ஜெனிவா பயணமானார்கள்.

ஜெனீவாவில் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தாம் செல்வதாக கனகரத்தினம் தெரிவித்துள்ளார். இறுதிப்போர் வரைக்கும் விடுதலைப்புலிகளுடன் இருந்த கனகரத்தினம் இப்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவின் இணைப்பாளராக உள்ளார். இறுதிப்போரில் ஒரு பொதுமகனைக்கூட சிறிலங்கா இராணுவம் கொல்லவில்லை. பொதுமக்களை கொலை செய்தது புலிகள் தான் என சாட்சி சொல்வதற்காக கனகரத்தினம் ஜெனிவாவுக்கு புறப்பட்டுள்ளார்.

இதேவேளை ஜெனீவா கூட்டத் தொடரில் சிறிலங்காக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளதெனவும், சமாதானத்தை விரும்பாமல் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க விரும்பும் மேற்கத்திய நாடுகளின் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களால் ஒரு போதும் ஜனநாயக விழுமியங்களை கொண்ட சிறிலங்கா தேசம் அஞ்சப் போவதில்லையென்று ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வீரவசனம் பேசி உள்ளார்.

மேற்குலக நாடுகளினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றச்சாட்டுக்களால், ஒரு போதும் சிறிலங்கா அரசு அஞ்சப் போவதில்லையென்றுஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

Comments Closed

%d bloggers like this: