இந்தியா புலம்பெயர் முக்கிய செய்திகள்

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.

ஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ஒரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்படும் அனைத்து ஊடகங்களாலும் சீமான் மற்றும் சத்தியராஜின் வேண்டுகோள்கள் பறக்கணிக்கப்பட்டதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

உச்சிதனை முகந்தால் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சங்கீதா தமக்கு ஆதரவு வழங்காததால் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு நடிகை சங்கீதாவை துரோகி என கடந்த புத்தாண்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்.