தமிழீழம் முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் சுமந்திரன் எம்.பியின் கொடும்பாவி.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று யாழ். பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. “தமிழின துரோகி சுமந்திரன்“ எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் “போர் குற்ற விசாரணை எங்கே?“ எனக் கேள்வியும் கேட்கப்பட்டிருக்கிறது.

படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருக்கிறது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனிடம் கேட்டபோது, “இது பல்கலைக்கழக மாணவர்களினாலேயே இது நடந்திருக்கிறது என நம்புகிறோம்..” என்று தெரிவித்தார். இலகுவில் எடுக்கமுடியத விதத்தில் உயர்ந்த கட்டடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள இந்தக் கொடும்பாவி நேற்று இரவு தொங்கவிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதனிடையே கூட்டமைப்பினர் ஜெனிவாவிற்கு செல்வதில்லையென எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் இன்று காலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.