"எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள்" – நேசக்கரம்

Home » homepage » "எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள்" – நேசக்கரம்

1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்புச் செய்ய விரும்புகிறார். இவர்கள் எதிர்பார்க்கும் தொகை 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 310€)

2) இராசேந்திரம் (முன்னாள்போராளி) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். குடும்ப வறுமை மருத்துவம் அன்றாட உணவுத்தேவைகள் யாவற்றுக்கும் வசதியற்ற நிலமையில் தவிக்கிறார். தொடர்ந்து படுக்கைப்புண்ணால் அவதியுறுகிறார். தன்னால் சிறுதொழில் ஒன்றினை மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில் உதவிகோரியுள்ளார். ஆடுவளர்ப்புச் செய்வதற்கு உதவியை வேண்டியுள்ள இவர் எதிர்பார்க்கும் தொகை 40ஆயிரம் ரூபா (அண்ணளவாக 250€)

3) வதனி கணவர் சிறையில் இருக்கிறார். கோழிவளர்ப்புச் செய்வதற்கான உதவியினைக் கோரியுள்ளார்கள். தேவைப்படும் நிதி – 40ஆயிரம் ரூபா (அண்ணளவாக 250€)

4) வியயேந்திரன் (சிறையில் இருக்கிறார்) இவரது மகளின் கல்விக்காக இலங்கை ரூபா 30ஆயிரம் உதவி கோரியுள்ளார். (190€)உதவி கிடைத்துவிட்டது.

5) சுபாகரி (கணவர் மாவீரர்) அம்பாறை 2பிள்ளைகள். குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த வீட்டுத்தோட்டம் செய்ய உதவி கோருகிறார். (தேவைப்படும் நிதி – 30ஆயிரம் ரூபா (அண்ணளவாக (190€)

6) சுகந்தினி (கணவர் மாவீரர்) அம்பாறை 6வயதில் ஒரு மகள் இருக்கிறார். குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோழி வளர்ப்புச் செய்ய உதவி கோருகிறார். (தேவைப்படும் நிதி – 40ஆயிரம் ரூபா (அண்ணளவாக 250€)

7) மாலா (முன்னாள் பெண்போராளி) 3பிள்ளைகள். கணவர் மாவீரர். 13வயதில் போராளியானவர். 2009 யுத்த முடிவின் பின்னர் ஊர் வந்த மாலாவை உறவுகள் ஏற்க மறுத்து ஒதுக்கியுள்ளார்கள். பிள்ளைகளை பராமரிக்க வசதியில்லாமையால் தனது மூத்த பிள்ளைகள் இரண்டு பேரையும் திருச்சபையொன்றிடம் கொடுத்திருக்கிறார். 3வயதான கடைசிக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். சுயதொழில் முயற்சியாக ஆடுவளர்ப்பிற்கு உதவிகோரியுள்ளார். ஆடுவளர்ப்புச் செய்வதற்கு உதவியை வேண்டியுள்ள இவர் எதிர்பார்க்கும் தொகை 40ஆயிரம் ரூபா (அண்ணளவாக 250€)

8) சூரியகுமார் (இவர் சிறையில் இருக்கிறார்) இவருக்கு வழக்கு உதவி தேவைப்படுகிறது. சூரியகுமாருக்க 30ஆயிரம் ரூபா(அண்ணளவாக (190€) வழங்கினால் வழக்கிலிருந்து விடுபட முடியும். சட்டத்தரணிக்கு இவ்வுதவியை வழங்கி இந்த இளைஞரின் விடுதலைக்கு உதவினால் அவர் தனது குடும்பத்தை கவனித்துக் கொள்வதாக உதவி கோரியிருக்கிறார்.

9) ஜோன்சன் (இவர் சிறையில் இருக்கிறார்) இவருக்கு வழக்கு உதவி தேவைப்படுகிறது. சூரியகுமாருக்க 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 310€) வழங்கினால் வழக்கிலிருந்து விடுபட முடியும். சட்டத்தரணிக்கு இவ்வுதவியை வழங்கி இந்த இளைஞரின் விடுதலைக்கு உதவினால் அவர் தனது குடும்பத்தை கவனித்துக் கொள்வதாக உதவி கோரியிருக்கிறார்.

10) சாகித்தியன் (முன்னாள் போராளி) அண்மையில் தடுப்பிலிருந்து விடுதலையாகியுள்ளார். 3பிள்ளைகள் மனைவியுடன் வாழ்கிறார். யுத்தத்தில் காயமடைந்து ஊனமுற்றவர் கைகால்கள் பாதிப்புக்கு உள்ளானவர். பிள்ளைகளின் கல்விச் செலவு அன்றாட வாழ்வாதாரம் சமாளிக்க இயலாத வறுமையில் வாழ்கிறார்கள். இவர்கள் சிறுகடை வியாபாரம் செய்ய விரும்புகிறார்கள். (தேவைப்படும் நிதி – 1லட்ச ரூபா (அண்ணளவாக 620€)

மேற்படி 10குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்க விரும்புவோர் நேரடியாகவே உங்கள் உதவிகளை வழங்கலாம். உங்களுக்கான தொடர்புகளைத் தந்துதவுவோம்.

எங்களுக்காய் வாழ்ந்து எல்லாம் இழந்து ஏதிலியாய் நிற்கிற எம்மவர்களின் வாழ்வை மேம்படுத்த உங்கள் நேசக்கரத்தினை நீட்டுங்கள்.

உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany

Shanthy Germany – 0049 6781 70723 ,மின்னஞ்சல்: nesakkaram@gmail.com , Skype – Shanthyramesh

Comments Closed

%d bloggers like this: