இனவாத தேரரின் கருத்துக்கு சிறிதரன் எம்.பி கண்டனம்.

Home » homepage » இனவாத தேரரின் கருத்துக்கு சிறிதரன் எம்.பி கண்டனம்.

இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள். எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேதானந்த தேரர் வடக்கு கிழக்குப் பகுதி தமிழருக்குச் சொந்தமில்லை என்று குறிப்பிட்டமை தொடர்பாக சிறிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றில் சிங்கள் பௌத்த பிக்குகளின் செயற்பாடு என்பது, இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடு என காட்டுவதாகவே அமைந்துள்ளது. அவர்கள் எப்போதுமே, இலங்கை தமிழ் மக்களின் மண் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வகையிலேயே அண்மையில், மோதானந்த தேரரின் கருத்தும் அமைந்துள்ளது.
வடக்குக் கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகப் பகுதி. இதனை கடும் போக்குடைய பெளத்த பிக்குகள் ஏந்தவெரு காலப்பகுதியிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு உண்மையாம வரலாறு தெரியாது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழருக்கு என்று தனியான வரலாறு இருக்கின்றது. ஆதியிலிருந்து இயக்கர், நாகர் என்ற இனம் இலங்கையில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இருகின்றன. அவர்கள் தமிழர்களே.

ஆனால் சிங்கள் மக்களின் மூதாதையரான விஜயன் குழுவினர் இலங்கைக்கு தற்செயலாகவே வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களே வந்தேறு குடிகள்.

அண்மையில் கூட பொலநறுவை,காலி மற்றும் அநுராதபுர பகுதிகளில் சிவன் ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதியிலிருந்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தமைக்கான சான்றாகவே காணப்படுகின்றது. இதனை பெளத்த பிக்குகள் மறைக்க முற்படுகிறான்றார்கள்.

அண்மைக்காலமாக தமிழர்களின் நிலங்களில் திட்டமிட்ட வகையிலே சிங்கள பெளத்த பிக்குகள் விகாரைகளை அமைத்து வருகின்றார்கள்

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான கடும் போக்கு கருத்துக்களை கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள்.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக உண்மையான விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திற்கு பயங்கரவாதிகளாக காட்டி தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்காமல் தடுத்தவர்கள் இப்பிக்குகளே. இவர்கள் காலத்திற்கு காலம் இவ்வாறான கருத்துக்களை கூறிவருபவர்கள். என்று தெரிவித்தார்.

Comments Closed

%d bloggers like this: