வரலாற்றை மாற்ற முயலும் துட்டன் எல்லாவெல தேரோ.

Home » homepage » வரலாற்றை மாற்ற முயலும் துட்டன் எல்லாவெல தேரோ.
The Lost Continent of Kumari Kandam.
The Lost Continent of Kumari Kandam.

சிங்கள இனத்தின் பாதுகாப்புச் செயலாளருக்கு வாழ்த்துக் கூறும் துட்டன் எல்லாவெல மேதானந்த தேரோ துட்டர்களின் வாரிசு என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். துட்டத்தனங்களால் நாடு கடத்தப்பட்ட பரம்பரை வந்தேறிகளாக ஈழத்தில் இறங்கி உயிர் பிளைத்ததை மறைத்து இன்று தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்று துட்ட தேரோ முழங்குவதில் தமிழர்கள் வியப்புக் கொள்ள வேண்டியதில்லை.

இந்தத் தேரோவின் கூற்றினை மறுத்துரைக்க வரலாற்று அறிஞர்கள் தேவையில்லை. சாமானிய தமிழர்களே போதுமானது.

முதலில் தேரோ தங்களது வரலாற்று நூலான மகாவம்சத்தைப் படிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட அந்த நூலின் பகுதி ஆறில் (Chapter VI) பக்கம் 31ல் விஜயனும் அவனது கூட்டாளிகளும் பாதி அளவு தலை மொட்டை அடிக்கப்பட்டு கப்பலில் ஏற்றி நாடுகடத்தப்பட்டார்கள் என்றும், அப்படி வந்தவர்கள்தான் ஈழத்தில் கரை ஒதுங்கினர் என்றும், இவர்களே சிங்கள இனத்தின் மூதாதையர்கள் என்றும் எழுதப்பட்டிருப்பதை இந்தப் பிக்கு எப்படி மறந்தார்? விஜயனுக்கு அவரது தந்தையே மொட்டை அடித்து நாடு கடத்துகிறார் என்றால் அந்த வழித் தோன்றல்கள் எப்படி நீதி நியாயம் பற்றிப் பேசுவார்கள்?

அதே “மகாவம்சம்” புத்தகத்தில் துட்ட கைமுனு பற்றிக் கூறப்பட்ட கதையைக் கூட இந்த புத்த பிக்குகள் திரித்து எழுதிப் பாடப் புத்தகங்களில் சேர்த்துவிட்டார்கள். அதிலும் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர்தான் இந்தத் திருத்துதல் நடைபெற்றுள்ளது. அதிகாரம் தானாகக் கைகளில் கிடைத்ததும் சரித்திரத்தை மாற்றும் வேலையை ஆரம்பித்தனர் சிங்கள ஆதிக்கவாதிகள்.

“மகாவம்சம்” புத்தகத்தின் 87வது பக்கத்தில் துட்ட கைமுனுவின் கூற்றைக் கீழே தருகிறோம். காலம் “கி.மு. 161”
The princes’ mother following Gamini, and caressing him, inquired, “My boy, why not stretch thyself on thy bed and lie down comfortably?” “Confined (replied he) by the Damilas beyond the river (mahaveliganga) and on the other side by the unyielding ocean, how can I (UN so confined a space) lie down without stretched limps?”

இளவரசர்களின் தாயார் கைமுனுவைப் பின் தொடர்ந்து சென்று வாஞ்சையுடன் விசாரிக்கிறாள், “என் மகனே ஏன் கை கால்களை நீட்டி வசதியாக உன் படுக்கையில் படுக்கலாமே?” படுக்கையிலிருந்தே அவன் (கைமுனு) பதிலளிக்கிறான், “ தமிழர்கள் மகாவலி கங்கைக்கு அப்பால் வாழ்கிறார்கள், மறுபக்கத்தில் பயனற்ற சமுத்திரம் இருக்கிறது, எப்படி நான் கை கால்களை நீட்டி வசதியாகப் படுக்க முடியும்?”

கிறிஸ்துவுக்கு முன் 161 என்பது மகாவம்சம் குறிப்பிடும் காலமாகும். இந்தக் காலக்கட்டத்தில் மகாவலி கங்கைக்கு மேல் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று துட்ட கைமுனு குறிப்பிடுவது “வரலாற்று ஆதாராமாக” இந்தப் பிக்குவுக்குத் தெரியவில்லையா? இந்தக் கூற்றைக் கூட சிங்களப் புத்த பிக்குகளும், ஆட்சியாளரும் பாடப்புத்தகங்களில் மாற்றி சொல்லவில்லையா?

1948க்குப் பிறகு வெளிவந்த பாடப் புத்தகங்களில் பின்வருமாறு திரித்துள்ளனர். இவர்களது வரலாற்றை – திரிக்கப்பட்ட கூற்று கிழே:-

துட்ட கைமுனுவின் தாய் மகனைப் பார்த்துக் கேட்கிறார், மகனே, “ நீ கைகால்களை நீட்டி வசதியாக உறங்கலாமே?” அதற்கு கைமுனு பதில் கூறுகிறார்:- அம்மா – வடக்குப் பகுதியில் தமிழர்கள் வாழ்கிறார்கள், தெற்குப் பகுதியில் சமுத்திரம், இப்படி இருக்கையில் நான் எப்படி சுகமாகக் கை கால்களைக் நீட்டி உறங்க முடியும்?” என்று பாடப் புத்தகங்களில் வரலாற்றைத் திருத்தி எழுதிய இந்தச் சிங்கள வரலாற்று நபர்கள் தமிழர்கள் எங்கே வாழ்ந்தார்கள் என்று இப்போது கேட்பதில் ஆச்சரியம் இல்லைத்தான்!

மகாவலி கங்கைக்கு அப்பால் என்று கைமுனு கூறியதை அப்படியே வடக்கு என்று மாற்றியதன் உள்நோக்கம்? மத்திய மாகாணத்திலும் அப்போது தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற ஆதாரம் மகாவம்சத்தில் இருப்பதை மறைக்கத்தான் சிங்களவர் முயற்சி செய்துள்ளனர். இந்த மகாவம்சம் புத்தகம் தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்டது என்பதுதான் உண்மை. சிங்கள இனத்தவர் போரிட்டார்கள் என்றால் அது யாருடன் என்ற கேள்விக்குப் பதில் தமிழர்களுடன்தான் என்பது தவிர்க்க முடியாதது!

வங்கத்திலிருந்து வந்த பரதேசிகளுக்கு இடம் கொடுத்தது தமிழர்கள்தான் என்பதை தேரோ மறுத்து புது விளக்கம் கொடுக்கமுற்பட்டுள்ளார்.

வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டும் இந்த ஆமத்தூறு போன்றவர்கள்.

லெமூரியா கண்டம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தார்கள். கடல் கோளின் எஞ்சிய பகுதிதான் இலங்கையாகும்.

தேரோவின் கூற்றுப்படி இந்தியாவிலிருந்து வந்தேறியவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள தூரம் 18 மைல் என்று கோத்தபாயா கூறுகிறார் (ஏதோ அவர்கள் கண்டுபிடித்ததாக அறிவித்தார்) தமிழ் நாட்டிலிருந்து தினமும் மீன்பிடிக்கக் கட்டுமரத்தில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் யாழ்ப்பாணத்தை முதலில் கண்டு பிடித்திருப்பார்களா? அல்லது வங்கத்திலிருந்த நாடுகடத்தப்பட்ட துட்டர்கள் கப்பலில் வந்து கண்டு பிடித்திருப்பார்களா? கட்டுமரம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதா? கப்பல் முதலில் கண்டு பிடிக்கப்பட்டதா? இந்தியாவையும் ஈழத்தையும் கடல் பிரிப்பதற்கு முற்பட்ட காலந்தொட்டு தமிழர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வருகிறார்கள். நாகர், இயக்கர் என்பது தமிழரின் இரு குழுக்கள். பின்னர் பல ஜாதிகளாக இவை பிரிந்தன.

தமிழ் இனத்தையும் அதன் வரலாற்றையும் அழிப்பதே சிங்கள பௌத்த துறவிகளின் திட்டமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. கி.பி. 543ல் ஓர் சிங்களத் துட்ட அரசன் யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்து வரலாற்று நூல்கள் அடங்கிய நூலகமான “சரஸ்வதி மண்டபம்” முழுவதையும் தீயிட்டு எரித்துவிட்டு ஓடிச் சென்றான்.

இதே துட்டன் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம் உட்பட பல சிவ ஆலயங்களை அழித்தான். தமிழர் பகுதிகளில் புகுந்து வரலாற்றை அழிப்பது இந்தத் துட்டனின் வேலையாக இருந்து வந்தது.

போர்த்துக்கீசர் காலத்தில் தமிழர்களின் பல சிவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன. நல்லூர் நூலகமும் அழிக்கப்பட்டது. இந்த அழிப்புக்குத் துணை போனது சிங்களப் பொளத்த பிக்குகள்தான்.

இதனையே 1981ல் காமினி திச நாயக்காவும், சிறில்; மாத்தியூவும் இணைந்து செய்தனர். யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் துட்டர்கள் வழிவந்தவர்களின் செயற்பாடுதான் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை.

இவை போக, துட்டன் எல்லாவெல தேரோ மேலும் ஓர் வரலாற்றுக் குறிப்பை உளறியுள்ளார். “வேலகந்த சாஸ்திரி” என்ற வரலாற்று ஆராச்சியாளர்” தமிழர்கள் ஏனைய இடங்களிலிருந்து தென்னிந்தியாவில் குடியேறியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நபரின் பெயர் “வேலகந்த சாஸ்திரி”. இந்தத் திரிபுவாதியின் உண்மை பெயர் “நீலகண்ட சாஸ்திரி” . இவர் பிராமணர் ஆவார். பிராமணர் குறிப்பாக ஆரியர் இந்தியாவுக்கு வந்தேறு குடிகள் என்பது இந்த ஆமத்துறுவுக்குத் தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் இவருக்குத் தன்னுடைய வரலாறே தெரியவில்லை, அப்படி இருக்கையில் பிராமணர், ஆரியர் வரலாறு தெரிய எப்படி வாய்ப்பிருக்கும்?

நீலகண்ட சாஸ்திரி தமிழருக்கு எதிரானவர். ஆரியர் வந்தேறு குடிகள் என்பதை ஏற்றுக் கொண்ட சாஸ்திரி, தமிழர்களும் வந்தேறு குடிகள்தான் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார். பின்னர் அதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

வரலாற்று ஆதாரங்களை எரித்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் புத்த பிக்கு இப்படிப் பேசுகிறார். தமிழர்கள் இலங்கையின் நாலா பகுதிகளிலும் நிர்மானித்திருந்த சிவ ஆலயங்களே இவற்றுக்குச் சான்றாகும். தமிழர் பகுதிகளில் புத்த கோவில்கள் இருந்ததாகவும், அவற்றின் மேல் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டதாகவும் தேரோ கூறுகிறார்.

பௌத்தத்தைப் பரப்புவதற்கு சங்கமித்திரையும் மகிந்தனும் படையெடுத்து தமிழர்களை வீழ்த்தி அனுராதபுரத்துக்கு வரவில்லை என்பதை புத்த பிக்குத் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் ஆண்டியாகத்தான் வந்தனர். தமிழரது சோழநாடு, தொண்டை நாடு வழியாக இந்த ஆண்டிகள் இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கியதே தமிழர்கள்தான். யாழ்ப்பாணம், வன்னி வழியாக வந்து சேர அனுமதி வழங்கியதும் தமிழர்கள்தான்.

தமிழர்கள் சில காலம் பௌத்தத்தைப் பின்பற்றினர். பௌத்த ஆலயங்கள் அமைக்க அனுமதி வழங்கினர். மகாபோதி கட்டப்பட்ட பின்னர் கூட தமிழர்கள் படையெடுத்து அனுராதபுரத்தை ஆண்டனர். அப்போது கூட பௌத்தத்தை அவர்கள் அழிக்கவில்லை. ஆனால் தருணம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கள பௌத்தர்கள் தமிழர்களையும் அவர்களது வரலாறுகளையும் அழித்துள்ளனர்.

இப்போது அகழ்வாராச்சி என்று சிங்கள ஆட்சியாளர்கள் கிளம்பியுள்ளனர். தமிழர்கள் அகழ்வாராச்சி செய்ய முடியாது. அனுராதபுரம், பொலநருவா, மின்னேரியா, பதவியா, பளுகஸ்காவெல, தெவனுவர, கதிர்காமம், சிவனொளிபாத மலை பகுதிகளில் தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கல்வெட்டுக்களும் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய சிங்கள ஆட்சியாளர் அனுமதிப்பார்களா? பலவீனப்பட்டுள்ள இனத்தை மேலும் நசுக்குவதற்கு பௌத்தர்கள் முயற்சிக்கின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவர் வாழ்ந்ததற்கான எந்தவித ஆதாரமும் வரலாற்றில் கிடையாது.

பௌத்தம் சிங்கள இனத்துக்குச் சொந்தமானதல்ல, பௌத்த கோவில்கள் இருந்த இடங்களெல்லாம் சிங்களவருக்குச் சொந்தம் என்றால், பீகார் மாநிலத்தில் இருக்கும் புத்த கயாவும் சிங்களவருக்குச் சொந்தம் என்றாகும்.

தமிழ் நாட்டில் பர்மா பஜார் இருக்கிறது. இதற்காக பர்மா நாடு (மியான்மர்) தமிழ் நாட்டை உரிமை கொண்டாடலாமா? பௌத்தம் சிங்களவருக்கு சொந்தமானது கிடையாது. துட்டர்களாகவும் திருடர்களாகவும் வாழ்ந்து வந்த சிங்களவரை மனிதர்களாக மாற்றியமைத்தது பௌத்த மதம். இவர்கள் பௌத்த மதத்தை தழுவினர்களே தவிர இவர்களது மதம் அல்ல பௌத்தம்.

நெடுந்தீவு, நைனாதீவு, ஊர்காவத்துறை போன்ற பகுதிகளில் எந்தக் காலத்திலும் சிங்களவர் வாழ்ந்தது கிடையாது. ஆகழ்வாராச்சி சிங்கள அரசினால் மேற்கொள்ளப்படுகிறது. இனவெறி கொண்ட அரசு தமிழர்களை அழிக்கவே முற்படுகிறது. இவர்களது கூற்றை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆயினும் திரும்பத் திரும்ப பொய்யைக் கூறினால் அதுவே உண்மையாகிவிடும், துட்டர்களுக்குப் பதில் கூற வேண்டியதில்லை, ஆயினும் நாம் அறிவுரை கூறவேண்டும் இவர்கள் திருந்துவதற்கு.

இந்த ஆமத்துறுவுக்கு ஓர் அறிவுரை கூறவிரும்புகிறோம். சிங்கள இனத்தின் வரலாற்று நூல்களான மகாவம்சம், தீபவம்சம் போன்ற நூல்களை முதலில் தீயிட்டு எரித்து விடுங்கள், அந்த வரலாற்று நூல்கள் இருக்கும் வரை தமிழர்கள் ஈழத்தின் மீது உரிமையுடையவர்கள் என்பது நிரூபணமாகும். எனவே நீங்கள் உங்களது வரலாற்றை மறைத்துவிடுங்கள்.

நீங்கள் அனைவரும் இப்போது இது போன்று பேசுவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை! காரணம் தமிழர்கள் ஒன்றுபடமாட்டார்கள், சிங்கள இனத்தவருக்கென்று காவடி தூக்க பல தமிழ்த் தலைவர்கள் இருக்கும் போது உங்கள் கொள்கைகளுக்கு வெற்றி கிடைப்பது உறுதிதான். துட்டர்களின் வரலாறு புனிதமாக்கப்பட்டு, தமிழர்கள் இழிவுபடுத்தப்படுவது இன்றைய காலகட்டத்தில் சாத்தியமானதுதான்.

Comments Closed

%d bloggers like this: