புலம்பெயர் முக்கிய செய்திகள்

நோர்வேயில் மாணவர் எழுச்சி நாள்

எதிர் வரும் 10.06.2012 ஞாயிறு பி.ப. 17.00 மணிக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் ஏற்பாடு செய்துள்ள மாணவர் எழுச்சி நாள் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடு, வல்லமை தரும் மாவீரம், மனசெல்லாம் மாவீரம், மாவீரர் புகழ் ஆகிய இறுவட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன.

அதேவேளை முள்ளி வாய்க்கால் நினைவேந்திய கலை நிகழ்வுகளும் காணொளியும் இடம் பெறவுள்ளன.

தியாகி பொன். சிவகுமரனை நினைவில் நிறுத்தி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நோர்வே இளையோர் கூறுகிறார்கள்.