டென்மார்க் முக்கிய செய்திகள்

டென்மார்க்கில் நடைபெற்ற விளையாட்டு விழா

டென்மார்க்கில் கடந்த சனிக்கிழமை (09.06.2012) அன்று வைல(Vejle) நகரில்; தமிழ் மக்களிடையான விளையாட்டு விழா நடைபெற்றது. தமிழர்களது பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு,கயிறிழுத்தல்,அஞ்சலோட்டம்,உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுடன் காலை 10மணிக்கு ஆரம்பமாகிய விளையாட்டுகள் மாலை 8 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

தொடர்சியாக மழை பெய்ததால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டாலும் உளமகிழ்வையும், உடல்நலத்தையும் தரும் இவ்விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் உற்சாகமாக பங்குபற்றியிருந்தனர். இறுதியாக வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு விளையாட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

படங்கள் : DKnews