டென்மார்க்

மாலதி தமிழ்க் கலைக்கூட மெய்வல்லுநர் போட்டி 2012

டென்மார்க்கில்  (யூலண்ட்) மாலதி தமிழ்க் கலைக்கூட  மெய்வல்லுநர் போட்டி 23-06-2011 சனிக்கிழமை கேர்ணிங், நகரிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றது. இதில் 20 கலைக்கூடங்களிலிருந்து சுமார் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். டென்மார்க் தேசியக்கொடியேற்றல், தமிழீழத்தேசியக் கொடியேற்றல், எழுச்சிப்பந்தமேற்றல், அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள். பெற்றோர், பார்வையாளர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினர்  கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.