பூந்தமல்லி சிறையில் 5 ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் பட்டினிப் போராட்டம்!

Home » homepage » பூந்தமல்லி சிறையில் 5 ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் பட்டினிப் போராட்டம்!

செங்கல் பட்டிலிருந்து பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்ட செந்தூரன் தம்மை விடுவிக்கக் கோரி இன்று 5 ஆவது நாளாகவும் தனது பட்டினிப் போராட்டத்தை உறுதியோரு தொடர்கிறார்.

பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப் பட்டிருக்கும் செந்தூரன் என்பவர் செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் என்ற போர்வையில் அமைந்திருக்கும் தடுப்புச் சிறைகளிலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்ட கூரையைக் கொண்ட கட்டிடத்தில் 120 காவல் துறையினரின் கண்காணிப்பில் உள்ள இச் சிறைச்சாலையில் எட்டுப் பேர் (8) மட்டுமே மிருகங்களைப் போல் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த செந்தூரன் அங்கும் தம்மை விடுதலை செய்யக் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவர்களை விரைவில் விடுதலை செய்வதாக கொடுத்த வாக்குறுதியை ஏற்று அப் போராட்டம் அவ்வேளை கைவிடப்பட்டிருந்தது.

ஆயினும் அதன் பின்னர் விடுதலை செய்யப்படாத காரணத்தால் உள்ளிருந்து பலமாக விடுதலைக்காக குரல் கொடுத்த செந்தூரனை கட்டாயத்தின் நிமித்தம் பூந்தமல்லி சிறப்பு முகாம் எனப்படும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, மனம் உடைந்த செந்தூரன் , தன்னையும் தன்னோடு முகாமில் உள்ள அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கி உள்ளார். தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் செந்தூரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Comments Closed

%d bloggers like this: