அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரச பயங்கரவாததை பாராமுகமாக இருப்பதை இட்டு தமிழர் நடுவம் டென்மார்க் கவலை

Home » homepage » அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரச பயங்கரவாததை பாராமுகமாக இருப்பதை இட்டு தமிழர் நடுவம் டென்மார்க் கவலை

மரியாம்பிள்ளை டெல்றொக்சனின் குடும்பத்தினருக்கும் மற்றய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் எமது ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம் என தமிழர் நடுவம் டென்மார்க் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு மேலும் ஒரு தமிழ் மகன் பலி.!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 தமிழ் அரசியல் கைதிகள் சிறிலங்கா படைகளால் கடந்த மாதம் கடுமையாக தாக்கப்பட்டு அனுராதபுரம் மற்றும் மகர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு இருந்தனர். இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர்களில் கணேசன் நிமலருபன் ஏற்கனவே சாவடைந்திருந்தார். நீண்ட போராட்டத்தின் பின்பு நிமலருபனின் வித்துடல் அவரது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

இப்பொழுது படுகாயமடைந்து கோமா நிலையில் இருந்த அரசியல் கைதி மரியாம்பிள்ளை டெல்றொக்சன் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாமையால் சாவடைந்துள்ளார். மேலும் காயமடைந்த பலர் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் சிறைகளில் தவிக்கின்றனர்.

தமிழ் இளைஞர்களை வீதிகளில் சுட்டுப்படுகொலை செய்து வந்த சிறிலங்கா அரசபடையினர் இப்பொழுது கைது செய்து சிறைகளிலேயே அடித்து கொலைசெய்கின்றனர்.

சிறிலங்கா அரசின் தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்களையும் படுகொலைகளையும் மீண்டும் ஒருமுறை வன்மையாக கண்டிப்பதுடன் அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரச பயங்கரவாததை பாராமுகமாக இருப்பதை இட்டு எமது கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காலம் தாழ்த்தாது அனைத்துலக சமூகம் தமிழ் அரசியல் கைதிகள் விடையத்தில் தலையிட்டு படுகாயமடைந்த ஏனைய அரசியல் கைதிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க சிறிலங்கா அரசை வலியுறுத்துவதுடன் தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறும் வேண்டுகின்றோம்.

அத்துடன் சாவடைந்த மரியாம்பிள்ளை டெல்றொக்சனின் குடும்பத்தினருக்கும் மற்றய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் எமது ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம்.

Comments Closed

%d bloggers like this: