இந்தியா

முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரம்! ஈகியர் முற்றமாய் தமிழகத்தில் உருவெடுப்பு!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுச் சின்னமாய் உண்மையை உலகிற்கு பறைசாற்ற சிற்பிகளின் ஒப்பற்ற படைப்பில் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் உவாகிறது ஈகியர் முற்றம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுச் சின்னமாய் உண்மையை உலகிற்கு பறைசாற்ற சிற்பிகளின் ஒப்பற்ற படைப்பில் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் உவாகிறது ஈகியர் முற்றம்.

தமிழர்களை அழித்து, தமிழர் வாழ்விடங்களை தம்வசப் படுத்தி எக்காளமிடும் சிங்களப் பேரினவாதம் ஈழமண்ணில் தமிழர்களின் அடையாளத்தை அகற்றி தவறான வரலாற்றை சித்தரிக்க முனையும் இவ்வேளையில் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், நீண்ட கால தமிழீழ ஆதரவாளரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயர்ந்த அர்ப்பணிப்புக்களினூடாகவும், தியாகங்களினூடாகவும் முன்னெடுத்துவந்த விடுதலைப் புலிகளுக்கு பல உதவிகளை நல்கி வந்தவருமான பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தான் வாழும் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவலம் தோய்ந்த வாழ்வை அழியாத் தடமாய், ஒரு வரலாற்றுப் படைப்பாய் உருவாக்கி வருகிறார்.

தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுவரும் இவ் ஈகியர் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரங்கள் மட்டுமன்றி, அக் கொடிய போரில் இருந்து ஈழத் தமிழர்களஇக் காக்கக் கோரி தம்மையே தீயிற்கு இரயாக்கிய தியாகிகளின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.

கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழன் இன்று அதே கல்லிடூடாக உலகிற்கு தமிழர்களின் புதிய செய்தியை சொல்லுகின்றான்.உலகின் மாபெரும் அதிசயமாக, அருங்காட்சியகமாக, வரலாற்றுப் பொக்கிசமாக விளங்கப் போகும் இவ் ஈகியர் முற்றம் மிகவும் திறமை வாய்ந்த சிற்பிகளால் உருவாக்கம் பெற்று வருகிறது.

இதனை உருவாக்கும் பழ.நெடுமாறன் ஐயா அவர்களூக்கும், சிற்பிகளுக்கும் என்றும் உலகத் தமிழினம் தலைவணங்கி நன்றி சொல்லும்.