டென்மார்க்

டென்மார்க்கில் தமிழ் குடும்பஸ்தருக்கு கொலை மிரட்டல்.

டென்மார்க் கேர்னிங் நகரத்தில் தமிழ் மக்கள் மீது மது போதையில் மிரட்டல் நடாத்துவது அதிகரிக்கிறது என்று போலீசாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதாக கேர்னிங் நகரத்தில் இருந்து பதிவாகும் அலைகள் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த கொலைமிரட்டல் தொடர்பாக அலைகள் இணையம் மேலும் தெரிவித்தமையானது.

கேர்னிங் Gl.Lande vej கமல் லன வை பகுதியில் சென்ற ஞாயிறு மாலை குடும்பஸ்தர் ஒருவர் ஸ்பார் ( spar) கடைக்கு சென்று வரும்போது மதுபானம் அருந்திய தமிழர் ஒருவர் கட்டுமீறிய தூஷண வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார்.

மரியாதையின் நிமிர்த்தம் விலகிச் சென்ற குடும்பத்தினர் மீது கடித்த அப்பிளை இந்த நபர் வீசியடித்தார்.

அதன் பின்னர் காரில் விரட்டிச் சென்று கொலை மிரட்டல் விடுத்து, மனித குலம் பேச வெட்கப்படும் மோசமான தூஷண வார்தைகளைப் பேசினார்.

ஈழ விடுதலையின் பெயரில் இந்த அநீதி நடந்துள்ளது மானமுள்ள தமிழ் உணர்வாளர்களிடையே பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான செயல்களால் இப்பகுதியால் பெண்கள், மரியாதை உள்ளவர்கள் நடமாட முடியாத பயங்கரம் கிளம்பியுள்ளதை போலீசாரிடம் அந்தக் குடும்பத்தினர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இத்தகைய செயல்கள் அப்பகுதியில் இருக்கம் டேனிஸ்வர்த்தக நிலையங்களுக்கு தமிழ் மக்கள் போகவே அஞ்சும் அவலத்தை பிறப்பித்துள்ளது.

இது போன்ற அவலங்களை ஏற்கெனவே மானமுள்ள அமைதி வாழ்வு வாழும் மேலும் பல குடும்பத்தினர் சந்தித்தாலும் அவர்கள் அச்சம் காரணமாக முறைப்படி போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக வாழும் மக்களுக்கு எதிராக கிளம்பியுள்ள இந்த அராஜகமும் – விடுதலையின் பேரில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுத்தர்பாரும் டேனிஸ் அரசின் இணைவாக்கக் கொள்கையை சீரழிக்கும் திட்டமிட்ட செயல் என்பதை அந்த குடும்பஸ்தர் போலீசாரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக அலைகள் இணையத்தளம் தெரிவித்துள்ளது.