டென்மார்க்

தமிழீழ மாவீரர்களின் டென்மார்க் உருத்துடையோருக்கு தமிழர் நடுவம் டென்மார்க்கின் முக்கிய அறிவித்தல்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக விலைமதிப்பில்லாத தமது இன்னுயிர்களை அர்ப்பணித்துவிட்ட எங்கள் மாவீரர்களின் அன்புக்குரிய பெற்றார், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பொதுமக்களுக்காக, தமிழீழ மாவீரர் பணிமனையின் டென்மார்க் இணைப்பகம் விடுத்துள்ள வேண்டுகோள்

எங்கள் இனம் விடுதலை அடைகின்றகாலம் வரையும் அதற்கு அப்பாலும், தமிழர்களின் வரலாறு நெடுகிலும், புனிதமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மாவீரர்களின் விபரங்கள், நினைவுக் குறிப்புக்கள்,இந்தப் போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றைத் தேடிச் சேகரித்து அவற்றை ஆவணப்படுத்தி, எதிர்காலத்திடம் அதன் மேன்மை மாறாமல் கையளிக்கவேண்டியதை தனது போராட்டப்பணியில் ஒரு அங்கமாகக் கொள்ளவேண்டும்.

மெய் சிலிர்க்க வைக்கும் பல தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், இன்னும் பதிவுகளில் வராமலேயே சதாரண நிகழ்வுகள் போல செய்திகளாய் கடந்து செல்வதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த அற்புதமான தியாகங்களின் உயிர் அத்திவாரங்களில் இருந்துதான், எங்கள் இனத்தின் விடுதலைக்கான போராட்டம் கட்டிஎழுப்பப்படுகின்றது.

அந்த மாவீரர்களின் உயிர்த் தியாகங்கள்தான், விடுதலைக்காகப் போராடும் இனத்தின் உந்துசக்தி. புனிதமான அவர்களின் நினைவுகள்தான், பாதைமாறாத பயணத்தின் வழிகாட்டி.

இந்த நோக்கத்தில், களமாடி வீழ்ந்த எங்கள் மாவீரர்களின் டென்மார்க் வாழ் மாவீரர்களிகளின் உருத்துடையோர் விபரங்களைச் சேகரித்து உறுதிப்படுத்தும் பணியை, தமிழீழ மாவீரர் பணிமனையின் டென்மார்க் இணைப்பகம் ஆரம்பித்துள்ளது.

அன்பான உறவுகளே!

தற்போதைய சூழலில் மிகக் கடினமானதாக இருந்தபோதும், இதனை ஆற்றப்படவேண்டிய ஒரு முக்கிய பணியாகக் கருதி, இதனைச் செயற்படுத்த முனைகின்றோம். அதற்கு மக்களாகிய உங்களின் ஒத்துழைப்பே முக்கியமானது.

இறுதிப் போர்க்கால கட்டங்களில், வீரச்சாவடைந்த உங்கள் பிள்ளைகள், உங்கள் குடும்ப உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோரின் விபரங்களை, புகைப்படங்களை, ஏனைய நினைவுக்குறிப்புக்களை எங்களுக்குத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தமிழீழ மாவீரர் பணிமனையின் டென்மார்க் இணைப்பகம் தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தற்பொழுது செயல்படுகின்றது.

எங்கள் மாவீரர்களின் அன்புக்குரிய டென்மார்க் வாழ் பெற்றார், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மாவீரர்களின் விபரங்களை கீழ்வரும் மின்னஞ்சலூடாக (nov@tamilcentre.dk ) அல்லது தமிழர் நடுவத்தை தொடர்புகொண்டு தமது விபரங்களைச் சேர்ப்பிக்கலாம்.

தமிழீழ மாவீரர் பணிமனையின் டென்மார்க் இணைப்பாளராக பணிபுரியும் மாவீரர் மேயர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தன் அவர்களை (தொலைபேசி: 31178890) தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்

தமிழர் நடுவம் டென்மார்க்

அறிக்கையை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.