தமிழீழம்

"தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவர்களையும் அதற்காக குரல் கொடுப்பவர்களையும் ஆதரியுங்கள்" -தமிழீழ எல்லாளன் படை

அன்பார்ந்த கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களே!

தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவர்களையும் அதற்காக குரல் கொடுப்பவர்களையும் ஆதரியுங்கள்.

தமிழீழ போராட்ட வரலாற்றில் எமது இனம் சுமார் நாற்பதாயிரத்துக்கு மேலான மாவீரர்களினதும்  மூன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்களினதும் தியாகத்தின் மேல்  நின்றவாறு கிழக்கில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றீர்கள். தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட வரலாற்று காலகட்டத்தில் இன்று தமிழ் தேசிய இனம் நிற்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தேர்தல் மூலம் தீர்வு கிட்டாது என்பது எமக்கு நன்றாக தெரிந்தபோதும் அரசும் அதன் அடிவருடிகளும் தமிழ் மக்கள் தம்முடனே இருக்கின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கும் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக இனவழிப்பாளர்கள்  உருவாகுவதை முறியடிப்பதற்காகவுமே இத்தேர்தலை ஆதரிக்க வேண்டிய நிலையில் அனைவரும் உள்ளோம் .

சிறிலங்கா பேரினவாத அரசு அளவிடமுடியாத படுகொலைகளை சில நாடுகளின்  ஆதரவுடன் சர்வதேசத்தின் கண் முன்  நிகழ்த்தி இருக்கிறது. தொடர்ந்தும்  இனவழிப்பு நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது.  எழுத்தில் வடிக்க முடியாத கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றது. நில அபகரிப்பு, கலச்சார சீர்கேடுகளும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. பேச்சு,எழுத்து சுதந்திரம்  மறுக்கப்பட்டு பொருளாதார ,கல்வி,அரசியல் என்று அனைத்து வழிகளிலும் சுதந்திரம் மறுக்கப்பட்டு திறந்த வெளி சிறையில் எமது மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். சிறீலங்கா அரசின்  கபடத்தனத்தை அதே ஜனநாயக வழியூடாக  அதன் முகத்திரையை கிழித்தெறிய வேண்டிய நிலையில் நாம் அனைவரும் நிற்கின்றோம்.

எனவே ”தமிழ்த்தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளையும் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட வேட்பாளர்களையும் வெற்றியடையச்  செய்து தமிழ் இனத்தின் தன்மானத்தை காக்க வேண்டியது அனைவரது தேசியக் கடமையாகும்.” தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் வேட்பாளர்களாக நிற்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளையும் அதற்காக உயிர் கொடுத்தவர்களையும் மனதில் நிறுத்தி சாதாரண அரசியல்வாதிகள் போல்லலாமல் தமிழ் மக்களின் அரசியல் போராளிகளாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ எல்லாளன் படையினராகிய நாம் ஒன்றை தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.  இனவழிப்பு அரசகட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையும் அவர்களது அடிவருடிகளையும் தோற்கடித்து புறந்தள்ளுவதுடன் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்துமாறு  உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

தமிழீழ எல்லாளன் படை