டென்மார்க்

டென்மார்க்கில் நடைபெறும் தியாகதீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வின் நிகழ்சி நிரல்கள்.

டென்மார்க்கின் பில்லுண்ட் நகரில் எதிர்வரும் 23ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு நடைபெறவிருக்கும் தியாகதீபம் திலீபனின் 25ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வில் போராளிகளும், நாடுகடந்த தமிழீழ அரசின் துணைபிரதமரும் மாவீரர் விவகார அமைச்சருமான உருத்திரா சேகரும் சிறப்புரையாற்றவுள்ளனர்.

நினைவு வணக்க நிகழ்வில் `கரிகாலன் ஈற்றெடுப்பு´ எனும் தேசியத்தலைவர் தொடர்பான கவிதை நூலும், சாந்தி வவுனியனின் மேயர் சிட்டு தொடர்பான `கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு´ கவிதை நூலும் போராளிகளால் வெளியிட்டு வைக்கப்படும்.

அனைத்து டென்மார்க் வாழ் தமிழீழ மக்களையும் கலந்து தீயாகதீபம் திலீபனுக்கு உங்கள் வீரவணக்கத்தை செலுத்துவதுடன் சமகால எமது விடுதலைப்போராட்ட அரசியல் நிலைப்பாட்டையும் போராளிகளிடமிருந்தே பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என தமிழர் நடுவம் டென்மார்க் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

நினைவுவணக்க நிகழ்வின் நிகழ்சி நிரல்கள்

 • அகவணக்கம்
 • பொதுச்சுடர் ஏற்றல்
 • தியாகதீபம் திலீபன், மேயர் சிட்டு மற்றும் இம்மாதமாவீரர்களுக்கான ஈகச்சுடரேற்றல்
 • தியாகதீபம் தீலிபனின் வரலாற்றுப்பதிவு
 • தியாக தீப நினைவுரை: நாடுகடந்த அரசின் மாவீரர் விவகார அமைச்சரும் உதவிப்பிரதமருமான உருத்திரா சேகர்
 • எழுச்சி நடனம்
 • கவிதை
 • இடைவேளை
 • சிறப்புரை `தமிழர் நடுவம் டென்மார்க்கின் தேவையும் உருவாக்கமும்´
 • நூல் வெளியீடுகள்
 • நூல் விவரணவுரை
 • சிறப்புரை `முள்ளிவாய்க்கால்´
 • சிறப்புரை: `சமகால எதிர்கால தமிழீழ விடுதலைப் போராட்ட செயல்பாடுகள்´
 • நன்றியுரை

நிகழ்வு ஒழுங்கமைப்பு: தமிழர் நடுவம் டென்மார்க், தொலைபேசி: 71450103