டென்மார்க்

தமிழர் நடுவம் டென்மார்க்கினால் நடாத்தப்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள்

23 .09 .2012 அன்று தமிழர் நடுவம் டென்மார்க்கினால் பில்லுண்ட் நகரத்தில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஞாயிறு மலை 4.30 மணியளவில் பொதுசுடர் ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தேசியகொடி கொடிப்பாடலுடன் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து பொது மாவீரர்கள், தியாகதீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், மேஜர் சிட்டு, தியாகி தங்கவேல் விஜயராஜ் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட தமிழீழ உணர்வாளர்கள் தீபங்கள் ஏற்றி மலர் வணக்கத்தினை செலுத்தினர், மேலும் நிகழ்வில் எழுச்சி நடனம் நடை பெற்றது. இன்றைய நிகழ்வின் சிறப்பு விடையமாக தேசியத் தலைவர் தொடர்பான அகரம் அமுதன் எழுதிய வெண்பா வடிவிலான கரிகாலன் இற்றேடுப்பு எனும் கவிதை நூலின் வெளியீடு நடை பெற்று மதிப்பீட்டு உரையும் வழங்கப்பட்டது. அதே போன்று சாந்திவவுனியன் எழுதிய மேயர் சிட்டு தொடர்பான கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு; எனும் கவிதை நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் உதவி பிரதமர் அவர்கள் தியாகி திலீபன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கவுரையினையும் வழங்கினார்.

தொடர்ந்து சமகால எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பாகவும், தமிழர் நடுவம் டென்மார்க்கின் தோற்றமும் தேவையும்,மற்றும் முள்ளிவாய்க்காலின் இறுதி கணங்கள் பற்றியும் போராளிகள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

கவிதைகள், மற்றும் நன்றியுரையினை தொடர்ந்து தேசிய கோடி இறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடல் ஒலிக்க உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் டென்மார்க்கின் பல பகுதிகளிலும் இருந்து உணர்வாளர்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

 நிகழ்வின் மேலதிக புகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்