அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமாவை முந்திய மிட் ரோம்னி

Home » homepage » அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமாவை முந்திய மிட் ரோம்னி

அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் அதிபருமான ஒபாமா(51), குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரோம்னி (65) ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

பல்வேறு கருத்து கணிப்புகளில் இருவரும் சமமான நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதம் நேற்று நடந்தது. கொலராடோவில் உள்ள டென்வர் நகர பல்கலைக்கழகத்தில் இந்த விவாதம் நடந்தது. அமெரிக்க தொலைக்காட்சிகள் அதிபர் பதவி வேட்பாளர்களின் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன.

இந்த விவாதத்தில் ஒபாமா, தற்போதைய பொருளாதார மந்தநிலையை போக்குவது பற்றி அதிகமாக பேசினார். ஆனால், மிட் ரோம்னி அமெரிக்க பொருளாதாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, நிதி தட்டுப்பாடு ஆகியவை குறித்து விரிவாக பேசினார். பொருளாதார மந்த நிலை யை போக்குவதில் ஒபாமா தோல்வி அடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு ஒபாமாவால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. 90 நிமிட விவாதத்தை தொடர்ந்து,

சி.என்.என் மற்றும் சி.பி.எஸ் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 67 சதவீதம் பேரின் ஓட்டுகள் மிட் ரோம்னிக்கு கிடைத்தது. ஆனால், ஒபாமாவுக்கு 25 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. முதல்கட்ட விவாதத்தில், அதிக ஓட்டு பெற்றுள்ளதால் ரோம்னியின் பிரசாரக் குழு உற்சாகம் அடைந்துள்ளது. தற்போது இரு வேட்பாளர்களும் சரிசமமாக இருக்கும் நிலையில், புதிய கருத்து கணிப்பு முடிவு ரோம்னியின் பிரசாரத்துக்கு பலம் சேர்க்கும் என்று பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.

Comments Closed

%d bloggers like this: