சிங்களத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்சில் ஒன்றுபட்ட மாவீரர் நாள் !

Home » homepage » சிங்களத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்சில் ஒன்றுபட்ட மாவீரர் நாள் !

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே குழப்பங்களைத் தோற்றுவிப்பதன் ஊடாக தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்திவிடலாம் என கங்கணங்கட்டியுள்ள இலங்கை அரசுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஒன்றுபட்ட வகையில் மாவீரர் நாள் நிகழ்வினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் பிரான்சில் தீவிரமடைந்துள்ளன.

இந்தவியடம் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளதோடு மக்கள் மத்தியில் நம்பிக்கையினையும் தோற்றுவித்துள்ளது.

பிரான்சின் முக்கிய தமிழர் அமைப்புக்களாக உள்ள தமிழர் நடுவம் மற்றும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழு ஆகிய இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே இரண்டு தடவைகள் சுமூகமான முறையில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இறுதி வரைவுக்கான சந்திப்பு இடம்பெறுகின்றது.

அனைத்து தமிழர் அமைப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் ஓர் பொதுத்தளத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்த வகையில் ஒன்றுபட்ட மாவீரர் நாளினை இருதரப்பும் முன்னெடுப்பது குறித்தான இறுதிவரைவு இன்றைய சந்திப்பில் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றுபட்ட மாவீரர் நாளுக்கான பிரான்ஸ் தமிழர் அமைப்புக்களின் முன்னெடுப்பு பிற புலம்பெயர் நாடுகளிலும் தொடரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு விடுதலைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட மாவீரர் நாளே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ள நிலையில் பிரான்சில் இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ளமையினை வரவேற்றுக் கொள்வதோடு மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்கள் தீர இது வழிவகுக்கும் என நா.த.அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகின்ற இறுதிச்சந்திப்பிக்கு பின்னர் ஓரிரு நாட்களில் இருதரப்பும் இணைந்த கூட்டறிக்கையொன்று வெளிவரும் எனத் தெரிவருகின்றது.

Comments Closed

%d bloggers like this: