பிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர் நாளை நடத்துவது என்ற உன்னதமான முயற்சி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால் வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

Home » homepage » பிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர் நாளை நடத்துவது என்ற உன்னதமான முயற்சி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால் வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

பிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர்நாள் நிகழ்வுக்கான முயற்சி பயனளிக்கவில்லை. ஸ்தான் மைதானத்தில், மாவீரர்நாள் நிகழ்வு நடைபெறும்.

பிரான்சில், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்ச்சியை ஒன்றிணைந்து நடாத்த எடுக்கப்பட்ட முயற்சி, வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும், எம்மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அற்புதப் பிறவிகளான மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வை, கருத்துவேறுபாடுகள் இன்றி, பிரிவுகள் இன்றி, ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது குறித்து, கடந்த சிலவாரங்களாக, தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுவிடயத்தில், கூடுதல் அக்கறையும் பொறுப்பும்கொண்ட சில நல்ல இதயங்களின் சளைக்காத முயற்சியின் பேரில், தமிழர் நடுவப் பிரதிநிதிகளுக்கும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் பிரதிநிதிகளுக்கும் இடையில், தொடர் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

இம் முயற்சியின் தொடர்ச்சியாக இறுதியாக, இன்று, ஞாயிற்றுக்கிழமை(04.11.2012), இதுவிடயம் தொடர்பாக தீர்க்கமான, இறுதியான நல்லமுடிவை எடுப்பது என்ற நிலைப்பாட்டில், ஒரு தரப்பினராகிய தமிழர் நடுவப் பிரதிநிதிகளும், நடுநிலைமை வகித்து தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நண்பர்களும், குறித்த கலந்துரையாடலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் சமூகமளித்திருந்தனர்.

மறுதரப்பினராகிய, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும், தீர்மானம் எடுக்கவல்ல அதிகாரம் உள்ளவர்கள் எவரும் கலந்துகொண்டு, இம்முயற்சிக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால், ஒன்றாக மாவீரர் நாளை நடத்துவது என்ற உன்னதமான முயற்சி, வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
மாவீரர் நாளை, தனித்து நடாத்துவது குறித்த தீர்மானங்களைத் தள்ளிப்போட்டு, அதற்கான வேலைத் திட்டங்களைத் தள்ளிப் போட்டு, இதுவிடயத்தில் நல்ல முடிவை எட்டிவிட முடியும் என பூரணமாக நம்பி, இதுநாள்வரையும் காத்திருந்த எமக்கு பெரும் ஏமாற்றமே விளைவாகக் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டினைப்போல், தாயக மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதிபலிக்கும் வண்ணம், லெப்டினன் சங்கர் ஞாபகார்த்த திறந்தவெளி அரங்கில்(ஸ்தான் மைதானத்தில்) மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவால், மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெறும் என்பதை அறிவித்துக் கொள்ளுகின்றோம்.
பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களே!

எங்கள், தேசியச் செல்வங்களின் நினைவுவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு, அந்த அற்புதமானவர்களை நெஞ்சில் ஏந்தி, நெய்விளக்கேற்றுவோம் வாருங்கள்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Comments Closed

%d bloggers like this: