பிரான்சில் தமிழர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஸ்தலத்தில் பலி.

Home » homepage » பிரான்சில் தமிழர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஸ்தலத்தில் பலி.
Foto: BFMTV
Foto: BFMTV

பிரான்சில் தமிழர் ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சாவடைந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த பரிஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவ்அதாவது;

இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் தமிழர் ஒருவர் அந்த இடத்திலேயே சாவடைந்துள்ளார். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) பொறுப்பாளரான பரிதி என்பவரே இவ்வாறு சுடப்பட்டு சாவடைந்தவராவார்.

கடந்த ஆண்டும் இவர் மீது இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின் ஒருவருடம் கழித்து இன்று துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி அந்த இடத்திலேயே இவர் (பரிதி) சாவடைந்திருப்பது பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் மத்தியில் அச்சத்தை ஊட்டியுள்ளது.

Comments Closed

%d bloggers like this: