தமிழ் ஊடகங்களுக்கு நெருடல் இணையத்தின் பணிவான வேண்டுகோள்.!

Home » homepage » தமிழ் ஊடகங்களுக்கு நெருடல் இணையத்தின் பணிவான வேண்டுகோள்.!

தமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுமாறு நெருடல் இணையம் சக இணையத்தளங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. நெருடல் இணையத்தால் வெளியிடப்பட்ட முழுமையான வேண்டுகோள் வருமாறு.>>>>

அண்மையில் பாரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் பரிதியின் படுகொலை தமிழ் மக்கள் அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்தியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இப்படுகொலை தொடர்பாக தமிழ் ஊடகங்கள் குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இயங்கும் ஒரு சில இணையத்தளங்கள் பொறுப்பற்ற வகையில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு வருவது வருந்தத்தக்கதுடன் தமிழ் மக்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மேலும் வளர்க்கக்கூடியதாகவே அமையும்.

செயற்பாட்டாளர் பரிதியின் படுகொலை தொடர்பாக பிரான்சுப் பொலிசாரின் விசாரனைகள் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத செயதிகளை வெளியிடுவது அவர்களின் விசாரணைக்கே தடங்கலாக அமையலாம்.

அன்பான சக இணையத்தள இயக்குனர்களே!

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களிடையே மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தாமல் ஒரு தலைமை! ஒரே தேசியம்! என்ற கோட்பாட்டுக்குள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அழப்பரிய செயல்பாட்டிற்கு வலுச்சேற்கும் வகையில் செய்திகளை வெளியிடுமாறு அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவண்
நெருடல் இணைய ஆசிரியர் குழு.

Comments Closed

%d bloggers like this: