தளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை.

Home » homepage » தளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை.

தளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை ஆனால் ஒரு சிலரால் காட்டிக்கொடுப்பும் துரோகப்பட்டம் வழங்குவதும் தொடர்கிறது….

ஒற்றுமையுடன் பொது எதிரியான சிங்கள தேசத்தை நோக்கியதான வேலைகளை சிந்திப்பதை விடுத்து 300 Pounds பெறுமதியான Laptop கணணிக்குள் 30 வருட கால போரட்டாட்டத்தை அடக்கி இருக்கும் சில இணையத்தளங்களை நாம் கருத்தில் கொள்ளாது விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் கீழ் அனைவரும் போராட்டத்தை வழிநடத்தக்கூடிய அர்பணிப்புள்ள போராளிகள் பொறுப்பாளர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு செயற்பட வேண்டுவதுடன் ஒரு சில பொறுப்பற்றவர்கள் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் துரோகிகள் போன்றும் காட்டிக்கொடுப்பவர்கள் போன்றும் கீழ்மட்டச் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நச்சுத்தனமாக அடிமனதில் விதைப்பத்தால் அவர்களும் ஒன்றும் அறியாமல் அவற்றை நம்பி கருத்துக்களையும் பொய்யான வதந்திகளையும் பரவ விட முற்படுத்தப்படுகின்றார்கள். எனவே தயவு செய்து உண்மை நிலைமையை புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் தேசியத்தலைவரின் சிந்தனைக்கமைய அவரது கடந்த கால வழிகாட்டல்களை முன்னிலைப்படுத்தி தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தை அடையும் வரை ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்.

நன்றி

Comments Closed

%d bloggers like this: